பஸ்சில் சென்ற பெண்ணிடம் 25 பவுன் நகை மாயம் போலீசார் விசாரணை
பஸ்சில் சென்ற பெண்ணிடம் கைப்பையுடன் 25 பவுன் நகை மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
பெங்களூருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவருடைய மனைவி அமுதா (வயது 40). இவர்கள் குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். திருமணம் முடிந்த நிலையில் அமுதா உறவினர்களுடன் பெங்களூருவுக்கு புறப்பட்டார். அவருடன் வேலூரை சேர்ந்த அவரது உறவினரும் பஸ்சில் வந்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உறவினர்களுடன் அவர் இறங்கினார். பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் புறப்பட்டதும் பெங்களூரு செல்லும் பஸ் ஒன்றில் ஏறினார். பஸ் வேலூரில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன் அமுதாவிடம் கண்டக்டர் பயணச்சீட்டுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது அமுதா தனது கைப்பையை தேடினார். அவரது கைப்பை மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா “கைப்பையை காணவில்லை, அதில் தான் பணமும், நகைகளும் இருந்தது” என்று கண்டக்டரிடம் கூறி உள்ளார். இதையடுத்து பஸ் கண்டக்டர் வேலூர் வடக்கு போலீசில் புகார் கொடுங்கள் என்று கூறி, அவரை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டார்.
போலீசார் விசாரணை
அதைத்தொடர்ந்து அமுதா வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறினார். கைப்பையில் ரூ.5 ஆயிரம், 25 பவுன் நகை இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அறிவழகன் விசாரணை நடத்தி வருகிறார். மாயமான நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.
போலீசார் கூறுகையில், “அமுதா சென்னையில் இருந்து வேலூருக்கு வந்து பஸ்சில் இறங்கி இருக்கிறார். பின்னர் பெங்களூரு செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ்சில் கைப்பையை அவர் தவறவிட்டாரா? அல்லது மர்ம நபர்களால் திருடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.