குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குளித்தலை அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிநாயக்கனூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதே போல் இப்பகுதியில் இருந்த ஆழ்குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்த நீரும் குறைந்து விட்டது. மேலும் கடந்த 6 நாட்களாக போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் அலுவலக அதிகாரிகளிடம் ஆண்டிநாயக்கனூர் பகுதி பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஆண்டிநாயக்கனூர் பகுதி பொதுமக்கள் காலிகுடங்களுடன் மணப்பாறை - குளித்தலை சாலையில் வேப்பங்குடி பிரிவு அருகே மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிகண்ணன், சிவாயம் ஊராட்சி செயலாளர் அருள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் வேப்பங்குடியில் இருந்து ஆண்டிநாயக்கனூருக்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களில் உள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்யப்பட்டு ஆண்டிநாயக்கனூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் குளித்தலை - மணப்பாறை சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.