தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2018-01-17 21:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள்


தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு கிராமங்களிலும், மாநகராட்சியில் வார்டுகள் தோறும் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை தாங்கி, பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி. ஆர். உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் திருப்பாற்கடல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. அம்மா அணி

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் அழகிரிசாமி உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் நகரசபை துணை தலைவர் ரத்தினவேல், நிர்வாகிகள் வேலுமணி, அலங்கார பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு தீபா பேரவை சார்பில், எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்


திருச்செந்தூர் தேரடி திடலில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆத்தூரில் தினகரன் அணி நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில், எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் ஷேக் தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் அ.தி.மு.க. நகர செயலாளர் அரசகுரு தலைமையிலும், ஆறுமுகநேரி வடக்கு தெரு பஜாரில் தினகரன் அணி ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் தலைமையிலும், ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமையிலும், தென்திருப்பேரையில் நகர செயலாளர் சிவலிங்கம் தலைமையிலும், குரும்பூரில் ஒன்றிய அவை தலைவர் பரமசிவன் தலைமையிலும், எட்டயபுரத்தில் அ.தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சந்திரன் தலைமையிலும், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்