தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாம் தூத்துக்குடியில் உதவி கலெக்டர் தலைமையிலும், ஸ்ரீவைகுண்டத்தில் தூத்துக்குடி பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும், திருச்செந்தூரில் உதவி கலெக்டர் தலைமையிலும், சாத்தான்குளத்தில் தூத்துக்குடி தனித்துணை ஆட்சியர் (முத்திரை), கோவில்பட்டியில் உதவி கலெக்டர் தலைமையிலும், ஓட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர், விளாத்திகுளத்தில் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், எட்டயபுரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், கயத்தாறில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும் நடக்கிறது.
பயன்பெறலாம்
இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதம் அடைந்து உள்ள அல்லது தொலைந்து போன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்றவை முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உரிய குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.