பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம் நீடிப்பு
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நீடித்து வருகின்றது.
பாகூர்,
புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் போராட்ட குழு சார்பில் தங்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 16-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து போராட்ட குழு தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். சின்னசாமி, ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் காரணமாக பத்திரப்பதிவு, பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியாமலும், சான்றிதழ் பெற முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.