காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுவையில் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி,
புதுவையில் காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவையில் உள்ள சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.
புதுவை மட்டுமல்லாது அருகில் உள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் நேற்று காலை முதலே கார், பஸ், ரெயில் மற்றும் மோட்டார்சைக்கிளில் புதுச்சேரிக்கு வந்தனர். புதுவை தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், வீராம்பட்டினம் கடற்கரை என பல்வேறு இடங்களில் அவர்கள் முகாமிட்டனர்.
பல்வேறு தரப்பு மக்கள் குவிந்ததால் புதுவை தாவரவியல் பூங்கா களைகட்டியது. அங்கு ஓடும் சிறுவர் ரெயிலில் குழந்தைகள் ஏறி குதூகலித்தனர். அவர்களுடன் பெற்றோரும் ஏறி அமர்ந்து பயணம் செய்தனர்.
மதிய வேளையில் தாங்கள் கையோடு கொண்டு வந்த உணவு வகைகளையும் உண்டு அங்கேயே ஓய்வெடுத்தனர். மாலையில் அவர்கள் கடற் கரையை நோக்கி படையெடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடற்கரைக்கு வருபவர்கள் கடலில் இறங்கிவிடாதவாறு இருக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதையும் மீறி சிலர் கடலில் இறங்கி விளையாடினர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டினார்கள். இதேபோல் பலர் பாரதி பூங்காவிலும் முகாமிட்டிருந்தனர். அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
கவர்னர் மாளிகை, சட்டசபை போன்ற பகுதிகளையும் வெளியூர்களிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்று தரிசனம் செய்தனர்.
அதுமட்டுமில்லாமல் சண்டே மார்க்கெட் பகுதியிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அங்கு விற்பனையான பொருட்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
காணும் பொங்கலையொட்டி நேற்று புதுவை நகரில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மதிய உணவினை தேடி பலர் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். சிலர் ரோட்டோர கடைகளில் கிடைத்ததை வாங்கி உண்டு பசியாறினார்கள்.
வெளியூர்களிலிருந்து வந்தவர்களில் பலர் பஸ்சை விட்டு இறங்கியதும் மதுக்கடைகளை தேடியே ஓடினார்கள். நகரப்பகுதியில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மது உண்ட போதையில் பலர் தன்னிலை மறந்து ரோட்டோரம் படுத்திருந்ததையும் காண முடிந்தது.