பொன்னேரியில் வங்கி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
பொன்னேரியில் வங்கி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). இவர் தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகைகள், ரூ.5 ஆயிரம், பட்டு சேலைகள் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மகேஷ் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.