திருத்தணி அருகே கார்-வேன் மோதல்; ஒருவர் பலி பொதுமக்கள் சாலைமறியல்
திருத்தணி அருகே கார்- வேன் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திருத்தணி,
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் தனது நண்பர்களான மதன் (35), மணிகண்டன்(30), சரவணன் (32) ஆகியோருடன் காரில் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை தோட்டத்திற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த கார் திருத்தணி -சென்னை தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த வேன் கார் மீது மோதியது.
இதில் காரில் பயணம் செய்த வெங்கடேசன், மணிகண்டன், மதன், சரவணன் ஆகியோரும் வேனில் வந்த திருப்பதியை சேர்ந்த விஜயலட்சுமி (32), ஸ்ரீனிவாசன் (25), பாரதி (28) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் லட்சுமா புரம் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகவும் அங்குள்ள வளைவில் உள்ள முள்புதர்களை உடனே அகற்றவேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பால சந்திரன் மற்றும் போலீசார் அங்குசென்று பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேனில் பயணம் செய்தவர்கள் திருப்பதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்றுவிட்டு திருப்பதிக்கு திரும்பி செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது என்பதும் தெரியவந்தது.