நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
காங்கேயம் பழைய கோட்டை ஊராட்சியின் செயலாளராக இருந்தவர் ரீமாரோஸ்லின்.
திருப்பூர்,
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய கோட்டை ஊராட்சியின் செயலாளராக இருந்தவர் ரீமாரோஸ்லின்(வயது 45). இவர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின்வாரியத்துக்கு செலுத்தவேண்டிய ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சம் என்று மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்தை முறைகேடு செய்ததாக புகார் வந்தது. இதுதொடர்பாக இவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஊராட்சி கணக்குகளை தணிக்கை செய்த போது, ரீமாரோஸ்லின் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது. தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.