சாணார்பட்டி, நெய்க்காரப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 44 பேர் காயம்
சாணார்பட்டி, நெய்க்காரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள நத்தமாடிப்பட்டி கிராமத்தில் பொங்கலையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜான்சன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டுக்கு வந்த காளைகள் வாடிவாசலுக்கு பின்புறம் ஒவ்வொன்றாக வரிசையில் நிறுத்தப்பட்டன.
ஒவ்வொரு காளையையும் திண்டுக்கல் கால்நடை உதவி இயக்குனர் சுப்பையா பாண்டியன் தலைமையிலான 9 கால்நடை மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். ஜல்லிக்கட்டுக்காக திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்த மொத்தம் 262 காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் குறைபாடுகள் உள்ள 6 காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள 256 காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.
ஜல்லிக்கட்டில் 400 மாடுபிடி வீரர்கள் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வந்த காளைகளை சீருடை அணிந்த இளைஞர்கள் போட்டிபோட்டு மடக்கி பிடித்தனர். பல காளைகள் பிடிபடாமல் துள்ளிக்குதித்து வீரர்களை மிரட்டியபடி பாய்ந்து சென்றன. சில காளைகள் மட்டும் வீரர்களின் பிடியில் சிக்கின.
பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும், காளைகளை அடக் கிய வீரர்களுக்கும் தங்ககாசு, வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, எவர்சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்கு, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதில் பலத்த காயமடைந்த கொசவபட்டியை சேர்ந்த சிங்கராயர் வயது (வயது 71), கோணப்பட்டியை சேர்ந்த ராசு (37) ஆகியோருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை, நத்தமாடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.