சிக்னல் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி

கூடலூர் கள்ளர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் கவுதம்.

Update: 2018-01-16 21:30 GMT
தேனி,

கம்பம் அருகேயுள்ள கூடலூர் கள்ளர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. அவருடைய மகன் கவுதம் (வயது 23). எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இவர், கம்பத்தில் சினிமா பார்த்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கம்பம்–குமுளி தேசிய நெடுஞ்சாலை நகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்