இரட்டை இலையை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி
இரட்டை இலையை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று சேலத்தில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
சேலம்,
புதுச்சேரியில் இருந்து நேற்று காலை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு காரில் புறப்பட்டுச்சென்றார். வழியில் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் அவருக்கு பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம், சரவணன், சசிகுமார் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இரட்டை இலையை மீட்கும் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கிடையாது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் அவரது அனுபவமின்மையை காட்டுகிறது. வயது முதிர்ந்தால் அனுபவம் இருக்கும் என்பது அனைவருக்கும் சரியாக வராது.
தமிழக மக்கள் துரோகத்தை ஏற்க மாட்டார்கள். இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் போய்விடும். கடந்த நவம்பர் மாதம் 23–ந் தேதி அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரைகூட பயன்படுத்த கூடாது என்று கூறிவிட்டனர். ஆனால், அதற்கு பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட உள்ளோம். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் இந்தாண்டுக்குள் வரும். இந்த தேர்தலில் இயக்கத்தின் பெயர், சின்னம் என எதுவும் இல்லாமல் மக்களை அணுகுவதில் சிரமம் உள்ளது.
இந்த நடைமுறை சிக்கல் குறித்து சமீபத்தில் சசிகலாவை சந்தித்து பேசினேன். அப்போது அவர், நீ என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள், நீ எடுக்கும் முடிவு சரியாக தான் இருக்கும் என்று கூறிவிட்டார். அதனால் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை(இன்று) மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க உள்ளோம். அது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிப்பேன்.
இவ்வாறு கூறினார்.