தைஅமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
திருவையாறில், தை அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் நீராடி, முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர்,
அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களையும், தாய், தந்தையர்களையும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டால் அவர்களது ஆத்மா சாந்தி அடையும். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். தை அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் மற்ற மாதங்களில் கொடுத்ததற்கு ஈடாகிவிடும் என்பதால் அதிக அளவில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். தை அமாவாசையான நேற்று திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் அதிகாலை முதலே அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி, மண்டபங்களில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் ஐயாறப்பர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர்-தர்மசம்வர்த்தினி புறப்பட்டு காவிரி ஆற்றுப்படித்துறையில் எழுந்தருளினர். தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி ஊர்வலம் 4 வீதிகளில் நடைபெற்றது. வழக்கமாக சாமி ஊர்வலத்தில் யானை வரும். தற்போது யானை புத்துணர்வு முகாமுக்கு சென்றதால் வரவில்லை. தை அமாவாசையையொட்டி புஷ்ய மண்டபத்துறை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மேலும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.