கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க வேலூர் போலீசார் ஒடிசா பயணம்
ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க வேலூர் போலீசார் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
வேலூர்,
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி காட்பாடி திருநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் மற்றும் மேல்மொணவூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் உடைத்து ரூ.10 லட்சம் வரை கொள்ளையடித்துச் சென்றனர்.
மர்ம நபர்களை பிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு சுங்கச்சாவடியை கடந்த ஒரு ஜீப் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அந்த ஜீப் எண்ணை வைத்துக் கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் கொள்ளையடித்தவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். அதில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வாகனத்தின் உரிமையாளர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த கொள்ளையர்களில் ஒருவரான ஜெபர் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஜீப்பையும், ரூ.12 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி ஜாவித் என்பவர் ஒடிசா மாநிலத்தில் வேறு ஒரு கொள்ளை வழக்குகளில் கைதாகி அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது போலீசாரின் தொடர் விசாரணையில் தெரிய வந்தது. அந்த முக்கிய குற்றவாளி மீது அங்குள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு ஏ.டி.எம். கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அந்த முக்கிய குற்றவாளியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் 2 போலீசார் ஒடிசாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த நபரை காவலில் எடுத்து விசாரணை செய்தபின் பல தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.