ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர், வேலிகளை சேதப்படுத்தியது

குடியாத்தம் அருகே ஒற்றை யானை விவசாய நிலத்திற்குள் புகுந்து நெற்பயிர்களையும், வேலிகளையும் சேதப்படுத்தியது.

Update: 2018-01-16 22:30 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் வனச்சரகம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. குடியாத்தம் வனச்சரகத்தை யொட்டி ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 15 யானைகள் குடியாத்தம் வனப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தின.

வனத்துறையினர், யானை கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் குடியாத்தத்தை அடுத்த தனகொண்டபல்லி மலையடிவாரம் பகுதியில் ரகுபதி என்பவரது நிலத்திற்குள் புகுந்த ஒற்றை யானை நெற்பயிர்களையும், வேலிகளையும் சேதப்படுத்தியது.

வனத்துறையினர் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் குமார், வனவர் கணேசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சேதங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் செய்திகள்