கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம போலீசார் கைது செய்த 2 பேரை விடுவிக்க வலியுறுத்தல்
நெல்லை அருகே, பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் கைது செய்த 2 பேரை விடுவிக்க வலியுறுத்தி நேற்று கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை தாழையூத்து அருகே உள்ள தென்கலம் கிராமத்தில் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு கலை நிகழ்ச்சிகள் 10 மணிக்கு மேல் தொடர்ந்து நடைபெற்றதாக தெரிகிறது.
அப்போது அங்கு தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதால் போலீசார், கலை நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்துமாறும், விளக்குகளை அணைக்குமாறும் கூறி உள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கும், ஊர் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தள்ளி மோதிக்கொண்டனர்.
இது தொடர்பாக ஊர் நாட்டாமை முத்துகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தென்கலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இரவு 10 மணிக்கு மேல் விழா நடத்தியது மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது என 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முத்துகிருஷ்ணன் மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
இதை அறிந்த கிராம மக்கள் தங்களது ஊரில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்த 2 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மோதலுக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் என்றும் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.