காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது
காணும் பொங்கலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது.;
கன்னியாகுமரி,
பொங்கல் பண்டிகையின் 3-வது நாள் காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் அறுசுவை உணவு சமைத்து, விருந்தினர்களுடன் அமர்ந்து உண்டு, சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று விளையாடி மகிழ்வார்கள். இதையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
உலக புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் நேற்று அதிகாலையில் சூரியோதயத்தை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் சூரியோதயத்தை பார்த்து ரசித்ததுடன் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், திருவேணி சங்கமம் பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெறுகிறது. இங்கு காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அவர்கள் அருவியில் நீராடி, சிறுவர் பூங்காவில் விளையாடி, அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், அருவியின் அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திற்பரப்பு அருவியின் அருகே புறக்காவல் நிலையம் உள்ளது. இது கடந்த சில நாட்களாக பூட்டி கிடக்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த புறக்காவல் நிலையத்தை முழு நேரமும் திறந்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். அத்துடன் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.
காணும் பொங்கலையொட்டி சொத்தவிளை கடற்கரைக்கு ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக சென்றனர். புதுமண தம்பதியினரும் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் ஒன்றாக கூடி அமர்ந்து கதைகள் பல பேசி கடல் அழகை ரசித்தனர்.
இதுபோல், குளச்சல் துறைமுகம் பாலம், வட்டக்கோட்டை, முட்டம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற சுற்றுலா தலங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.