உலக சிக்கன நாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்

நாகர்கோவில்,
உலக சிக்கன நாளையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30–ந் தேதி உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் பள்ளி மாணவ– மாணவிகளிடையே சேமிப்பு பண்பை வளர்ப்பதற்காகவும், சிக்கனம் பழக்கத்தினை கடைபிடிப்பதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சிக்கனம் மற்றும் சேமிப்பு பழக்கங்களை சிறுவயதிலிருந்து கடைபிடித்து வந்தால் அவர்களது வாழ்வில் மிகபெரிய மாற்றங்கள் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்டத்தில் உலக சிக்கன நாளையொட்டி சிறு சேமிப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 22 பள்ளிகள் பங்கேற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகப்போட்டி மற்றும் நடன போட்டிகள் மூன்று பிரிவுகளாக (நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வாரியாக) நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற 68 மாணவ– மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜாமணி (சிறுசேமிப்பு), கோமதிநாயகம் (வளர்ச்சி) மற்றும் பள்ளி மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.