மதுவிற்ற 5 பேர் கைது ரூ.67ஆயிரம், 200 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஒரத்தநாடு பகுதியில் மதுவிற்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.67 ஆயிரம் மற்றும் 200 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்

Update: 2018-01-13 23:01 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து அவரது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்பு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் ஒரத்தநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற மேஉளூரை சேர்ந்த வெங்கிடாஜலபதி, ஒரத்தநாடு-புதூரை சேர்ந்த வைரச்சாமி(வயது48), ஒரத்தநாடு யானைக்காரதெரு செந்தில்(40), ஆதனக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்த அன்புமணி (40), திருநல்லூரை சேர்ந்த இந்திரகுமார் (34) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.67 ஆயிரத்தையும், 200 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்