பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பழனி பஸ் நிலையம் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-01-13 22:35 GMT
பழனி,

பழனி பஸ் நிலையம் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு கட்சியின் ஆயக்குடி பேரூர் செயலாளர் இளமதி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி செயலாளர் துரை.முத்தரசு, துணை செயலாளர் போர்க்கொடியேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி பழனி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்த பொன்மலருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இறந்த பொன்மலர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை வைக்க அனுமதிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்