சாலையோர பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

பாடாலூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

Update: 2018-01-13 22:45 GMT
பாடாலூர்,

மதுரையில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பரமக்குடியை சேர்ந்த அகமது (வயது45) என்பவர் பஸ்சை ஓட்டினார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் சந்தை பேட்டை அருகே அந்த ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் அகமது, மாற்று டிரைவர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முத்தையா, பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த சிவபிரகாசம், கண்ணன், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மோகன்ராவ், இந்துமதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்