லாரி உரிமையாளரின் காரில் 4 டயர்களும் திருட்டு

லாரி உரிமையாளரின் காரில் 4 டயர்களும் திருட்டு

Update: 2018-01-13 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் மதிவாணன்(வயது 34). லாரி உரிமையாளர். நேற்று முன்தினம் இவர், தனது காரை வீட்டின் அருகேயுள்ள காலி இடத்தில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். நேற்று காலை மீண்டும் வந்து பார்த்த போது, காரில் உள்ள 4 டயர்களும் திருடப்பட்டிருந்தன. காருக்கு அடியில் கருங்கற்கள், மரத்துண்டுகளை அடுக்கி வைத்து மர்ம நபர்கள் டயர்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசபுரம் பகுதியில் எல்.ஐ.சி அலுவலகம் அருகே ஒருவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் 4 டயர்களும் இதேபோல திருட்டு போயிருந்தது குறிப்பிடத்தக்கது. காரில் டயர் திருடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டு பெரம்பலூரில் மர்ம கும்பல் சுற்றித்திரியலாம் எனவும், அவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்