குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள நீர்தேக்க தொட்டியின் மோட்டார் பழுதாகி இருந்தது. இதனால் கிராமத்தில் உள்ள மேலத்தெரு, நடுத்தெரு, வடக்குதெரு மக்கள் குடிநீர் தட்டுபாட்டால் அவதிப்பட்டனர். தற்போது பொங்கல் நேரமாக உள்ளதால் குடிநீர் தேவை அதிகமாக இருந்தது. நேற்றும் குடிநீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கும்பகோணம்-ஜெயங்கொண்டம் சாலையில் கழுவந்தோண்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் ஊராட்சி எழுத்தர் அழகேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்படும், பழுதடைந்த மோட்டார் விரைந்து சரிசெய்யப்படும் என உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.