உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு 5 கிலோ கஞ்சா கடத்த முயன்றவர் சிக்கினார்

உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு 5 கிலோ கஞ்சா கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-13 22:26 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரம் குளத்துக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இதிரிஸ்கான் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பியோடினர். அதில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த மூட்டையில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் தேனி குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 51), தப்பியோடியவர் ஆனைமலையன்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் (45) என்றும், அவர்கள் கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

அவர்கள் கடத்தி செல்ல முயன்ற 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய தமிழ்செல்வனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்