மதுரை–பழனி பாசஞ்சர் ரெயில் கோவை வரை நீட்டிப்பு

மதுரையில் இருந்து பழனிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2018-01-13 22:21 GMT
மதுரை,

மதுரையில் இருந்து பழனிக்கு பயணிகள் ரெயில் மதுரையில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு பழனி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்தநிலையில் இந்த ரெயில் கோவை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு பழனி ரெயில்நிலையம் வந்தடைகிறது. இந்த நீட்டிப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்