கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளில் செல்ல மீனவர்களை அனுமதிக்கக்கோரி மனு
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளில் செல்ல மீனவர்களை அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனுகொடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்,
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகுகளில் சென்று கலந்துகொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– கடந்த காலங்களில் தொடர்ந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் குடும்பத்தினருடன் நாட்டுப்படகில் பாதுகாப்பாக சென்று வந்துள்ளோம். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்தபோது கூட நாட்டுப்படகில் திருவிழாவிற்கு சென்று கலந்து கொண்டு வந்துள்ளோம். இதனிடையே வணிக ரீதியிலான விசைப்படகில் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக நாட்டுப்படகு மீனவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உரிய ஆணை பெறப்பட்டுஉள்ளது. எனவே, இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளில் பாரம்பரிய மீனவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும். மொத்தம் 10 படகுகளில் 170 பேர் செல்ல அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.