இடிந்துவிழும் நிலையில் உள்ள கடலாடி பஸ் நிலைய கட்டிடத்தை உடனடியாக மராமத்து செய்ய வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்

இடிந்து விழும் நிலையில் உள்ள கடலாடி பஸ் நிலையத்தை உடனடியாக மராமத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. விவசாய அணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

Update: 2018-01-13 22:15 GMT
ராமநாதபுரம்,
 
கடலாடி தாலுகாவில் உள்ள 40 வருவாய் கிராமங்களை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட கிராம மக்களும், கடலாடி யூனியன் அலுவலகத்திற்கு உட்பட்ட 60 ஊராட்சி பொதுமக்களும் கடலாடி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடலாடி பஸ் நிலையம் மிகவும் மோசமாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருப்பினும் வேறு வழியின்றி பொதுமக்கள் பஸ் நிலைய கட்டிடத்திற்குள் நிழலுக்காக ஒதுங்கி வருகின்றனர். இந்த சேதமடைந்த கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே பயணிகள் நிற்க வேண்டி உள்ளது.

எனவே பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக கடலாடி பஸ் நிலைய கட்டிடத்தை மராமத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் துணை செயலாளர் ஆப்பனூர் குருசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்