சென்னையில் போகி பண்டிகையால் கடும் புகை மூட்டம்
போகி பண்டிகை காரணமாக சென்னை புறநகரில் கடும் புகை மூட்டம் காணப்பட்டதால் 6 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 16 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் பனி மூட்டம் நிலவியது.
நேற்று போகி பண்டிகை என்பதால் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாலையிலேயே தங்கள் வீடுகளுக்கு முன்பு குப்பைகள், பழைய பொருட்களை தீ வைத்து எரித்தனர். இதனால் பனி மூட்டத்துடன், புகை மூட்டமும் சேர்ந்து கொண்டது.
அதிகாலை 3 மணியில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிரே இருப்பவர்கள் யார்? என்றே தெரியாத அளவுக்கு கடுமையான புகை மூட்டமாக காணப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.
இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து துபாய், சார்ஜா, சிங்கப்பூர், பக்ரைன், மஸ்கட், தோகா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 8 விமானங்கள் தரைஇறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
இலங்கையில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரைஇறங்க முடியாமல் மீண்டும் கொழும்பு நகருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. கொழும்பு, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த 5 விமானங்கள் ஐதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த விமானம் திருச்சிக்கும், மலேசியாவில் இருந்து வந்த விமானம் கோவைக்கும் திருப்பி விடப்பட்டன.
அதேபோல் சென்னைக்கு விமானங்கள் வராததால், சென்னையில் இருந்து தோகா, மஸ்கட் ஆகிய நகரங்களுக்கு செல்லவேண்டிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் அந்த விமானங்கள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை 40-க்கும் அதிகமான விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல முடியவில்லை. இதேபோல் விமானங்கள் தரை இறங்க முடியாததால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கும் விமானங்கள் வரவில்லை.
புகை மூட்டத்தினால் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விமான சேவை பாதிக்கப்பட்டது. புகைமூட்டம் ஓரளவு குறைந்ததை தொடர்ந்து காலை 9 மணிக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது. தரை இறங்க முடியாமல் திருப்பிவிடப்பட்ட 16 விமானங்களும் சுமார் 7 மணி நேரம் தாமதமாக ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு திரும்பி வந்து சேர்ந்தன.
சுமார் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் 3 மணியில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன. இதனால் அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகளும், பயணிகளை வரவேற்க வந்த உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பெண்கள் கைக்குழந்தைகளுடன் விமான நிலையத்தின் வெளியே நீண்டநேரம் காத்திருந்தனர்.
ஆண்டுக்கு ஒரு நாள் போகி பண்டிகை அன்று இதுபோன்ற நிகழ்வு நடப்பதாகவும், ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு புகை மூட்டத்தினால் விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.