முதுமலையில் புலிகள் சாலையோரம் சுற்றித்திரிய காரணம் என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்
முதுமலையில் புலிகள் சாலையோரம் சுற்றித்திரிய காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
மசினகுடி,
முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான பல்வேறு மேம்பாட்டு பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் புலிகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது.
ஆனால் புலிகளை காண்பது மிகவும் அரிதாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் புலிகள் வெளியே வரவே வராது. சாலையோரங்களில் புலிகளை காணவே முடியாது. மேலும் வனத்துறையினர் அழைத்து செல்லும் வாகன சவாரி, யானை சவாரி போன்றவற்றில் செல்லும் சுற்றுலா பயணிகளும் புலிகளை காண்பது அரிதாகவே இருந்தது.
இந்த நிலையில் மசினகுடி-தெப்பகாடு சாலை மற்றும் கக்கநல்லா- தொரப்பள்ளி சாலையில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கடந்த ஒரு வார காலமாக தினமும் புலிகளை கண்டு ரசித்து வருகின்றனர். பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் புலிகள் சாலையோரங்களுக்கு வந்து அமர்ந்து கொள்வதுடன், சாலையை கடந்தும் செல்கின்றன.
அது மட்டுமின்றி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள நீர் நிலைகளுக்கும் வந்து செல்வதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் புலிகளை கண்டு மகிழ்ச்சியடைந்து செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக சாலையோரங்களில் புலிகள் சுற்றித்திரிவதற்கான காரணம் என்ன என்பது குறித்து புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சரவணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்போது புலிகளுக்கு தேவையான பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யபட்டு வருகின்றன. முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளதால் சாலையோரத்துக்கு வரும் புலிகளை எளிதில் காண முடிகிறது. மேலும் விரைவில் கோடை காலம் தொடங்க உள்ளதால் புலிகள் நீர் நிலைகளை தேடி செல்ல சாலைகளை கடக்கின்றன. சாலையோரங்களுக்கு வரும் புலிகளை யாரும் தொந்தரவு செய்ய கூடாது. அதையும் மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமின்றி அவர்களை புலி தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே வாகனங்களில் செல் பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.