கூடலூர், நெல்லியாளம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

கூடலூர், நெல்லியாளம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.;

Update: 2018-01-13 22:15 GMT
ஊட்டி,

கூடலூர், நெல்லியாளம் நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா? என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடலூர் நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் எம்.ஜி.ஆர். நகர் வார்டு எண்-11-ல் முடிக்கப்பட்ட சிறிய கல்வெட்டுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் சாலை பணி, நெல்லியாளம் நகராட்சி வார்டு எண் 13 மற்றும் 14-ல் ரூ.8 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குடிநீர் குழாய் பணியை ஆய்வு மேற்கொண்டார்.

பாண்டியாறில் ரூ.4 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கிணறு, நெல்லியாளம் டேன்டீ ஜேக்கப் தொழிற்சாலை அருகில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, உப்பட்டி பூதாலக்குன்னு சாலை வார்டு எண்.20-ல் ரூ.10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட சிறுபாலம், கூமூலையில் உள்ள கிணற்றுக்கு அருகில் ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேரங்கோடு டேன்டீ ரேஞ்ச் 1-ல் ரூ.4 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குடிநீர் குழாய் பணி, எம்.ஜி.ஆர். நகரில் ரூ.1½ லட்சம் செலவில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் பணியை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்