வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் குறித்து ‘நாசா’ விளக்கம்
சுவீடன் நாட்டில் நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரிகிறது.
சூரியக் கதிர்கள் நுண் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும்போது சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் இப்படிப்பட்ட சூரிய ஒளிவட்டத்தைப் பார்க்க முடியும்.
ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரிகிறது.
இப்படி சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்துக்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியிருக்கிறது. அதில், இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது பனித்துளியானது காற்றில் உறைந்து இருக்கும். அது மிகச்சிறிய லென்சாக செயல்படும். சிறிய, சமதளமான, அறுங்கோண பனிக்கட்டிகள் காற்றில் இருக்கும். அதன் மீது சூரிய ஒளி படும்போது ஒளியானது பல்வேறு கோணங்களுக்கு எதிரொளிக்கப்படும். இந்த ஒளிவட்டம், பனிக்கட்டியின் வடிவத்தைப் பொறுத்து மாறுபடும் என்று தெரிவித்திருக் கிறது.
இதுபோன்ற ஒளிவட்டம், நிலா வெளிச்சத்திலும் ஏற்படும். ஆனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒளிவட்டம் சரியாகத் தெரியாது. சூரியன் அல்லது சந்திரனால் ஏற்படும் ஒளிவட்டத்தில் நடுவிளிம்பு கூர்மையாகவும், வெளியில் இருக்கும் விளிம்பு விரிவடைந்தும் காணப் படும்.