பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
பொங்கல் பரிசு தொகுப்புதூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 213 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 957 ரேஷன் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பயனாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.1 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 626 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் ஆய்வுஇந்த பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, துணைப்பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) மனோகரன், துணைப்பதிவாளர் சிவகாமி ஆகியோர் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை நடத்தும் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, விரைந்து பரிசு தொகுப்பை முறையாக வழங்க ஊழியர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.