பொங்கல் பண்டிகை விடுமுறை: கோவை பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி வெளியூர் செல்வதற்காக கோவையில் உள்ள பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோவை,
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. நேற்று 8-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதனால் கோவை மாநகர பகுதியில் டவுன் பஸ்கள் அதிகளவில் ஓடின. இதனால் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கோவையில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் நேற்று கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும் அந்த பஸ்களில் நிற்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சில பஸ்கள் பஸ்நிலையத்துக்கு வருவதற்கு முன்பே, பயணிகள் முண்டியடித்து ஓடி சென்று ஏறினார்கள்.
இதைத்தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி, பஸ்நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து, பின்னர் தங்கள் செல்லும் இடத்துக்கான பஸ்கள் வந்ததும், அதில் வரிசையாக ஏற வைத்த னர். இதனால் வயதானவர்களும் எவ்வித சிரமமும் இல்லாமல் பஸ்களில் ஏறிச்சென்றனர்.
குறிப்பாக காந்திபுரம் மத்திய பஸ்நிலையத்தில் ரோடு வரை பயணிகள் வரிசையாக நின்றனர். சிங்காநல்லூர் பஸ்நிலையத்திலும் இதே நிலை காணப்பட்டது. கோவையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மிக குறைவாக இருந்ததால், பலர் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் வேறுவழியின்றி அந்த பஸ்களில் பயணிகள் ஏறிச்சென்றனர்.
மேலும் கோவை ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோவையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் சென்னை, கேரளா சென்ற அனைத்து ரெயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டியில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும் கூட்டத்தை பொருட்படுத்தாமல் ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் நின்று கொண்டே பயணம் செய்தனர்.
கோவை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு கூடுதல் போலீசார் நியமிக் கப்பட்டனர். அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, சந்தேகத்துக்குரிய நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் பணிக்கு வந்து விடுவார்கள். இதனால் கோவையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சேலம், கரூர், திருச்சி, தேனி உள்பட பல்வேறு இடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படு கிறது.
எனவே பொதுமக்கள் யாரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது குறித்து கவலைப்பட தேவை இல்லை. மேலும் சிங்காநல்லூர், காந்திபுரம் விரைவு போக்குவரத்து பஸ்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் முன்பதிவுகளும் செய்து கொள்ளலாம். அதுபோன்று விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் செல்ல ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால், தேவைக்கு ஏற்ப கூடுதலாக வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.