தஞ்சையில் போலீஸ்- பொதுமக்கள் பங்கேற்ற பொங்கல் விளையாட்டு போட்டி
தஞ்சையில் போலீஸ்- பொதுமக்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இதனை டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட போலீஸ் துறை சார்பில் போலீஸ்- பொதுமக்கள் பங்கேற்ற பொங்கல் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
தஞ்சை, வல்லம், திருவையாறு கோட்டங்களுக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் கோட்டங்களுக்கு கும்பகோணத்திலும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களுக்கு பட்டுக்கோட்டையிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
இதில் கைப்பந்து, கபடி, பூப்பந்து, ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, வளைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என தனித்தனியாக பங்கேற்றனர். தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் வரவேற்றார்.
போட்டிகளை தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.