தி.மு.க. மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

ஈரோட்டில் தி.மு.க. மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-01-11 22:45 GMT
ஈரோடு,

தி.மு.க. மண்டல மாநாடு நடத்துவது குறித்த ஈரோடு தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நடக்கும் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டை சிறப்பாக நடத்துவது. ஈரோட்டில் வருகிற மார்ச் மாதம் 24-ந் தேதி, 25-ந் தேதி ஆகிய நாட்களில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்வது.

போராட்டத்திற்கு முடிவு

மாநாட்டிற்கு முன்ஏற்பாடாக மாநகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு வாரியாக கூட்டம் நடத்துவது. தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் அனைத்து இடங்களிலும் கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கொடுக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பகுதி செயலாளர் ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்