8-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் பயணிகள் அவதி
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 8-வது நாளாக தொடர்வதால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
ஈரோடு,
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி இரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 8-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலும் குறைவான அரசு பஸ்களே இயக்கப்பட்டன. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சீருடை அணியாமல் பணியில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் சீருடை இல்லாத மாற்று உடையை அணிந்துகொண்டு வேலை செய்தனர்.
பள்ளி விடுமுறை
ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், சத்தியமங்கலம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் இல்லாமல் குறைவான பஸ்களே சென்று வந்தன. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் பயணிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கரூர் வரை சென்று, அங்கிருந்து வேறு ஒரு பஸ் மாறி சென்றனர்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு நேற்றிலிருந்தே திட்டமிட்டனர். ஆனால் பஸ்கள் ஓடாததால் பலரும் தங்களது பயணத்தை ஒத்தி வைத்து உள்ளனர்.
ரெயில்களில் கூட்டம்
குடும்பத்துடன் வெளியூருக்கு செல்பவர்கள் பஸ்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அவர்கள் வேறு வழியின்றி 2, 3 பஸ்கள் மாறி தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமப்பட்டு சென்றனர். மேலும், பஸ்கள் ஓடாததால் ரெயில்களிலும் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதற்கிடையே தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுவதால் ஒரு சில இடங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகளும் அரசு பஸ்களில் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. திருப்பூரில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் வந்துகொண்டு இருந்தது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டினார். அப்போது திடீரென எதிரே சென்றுகொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். எனவே தற்காலிக டிரைவரை நியமிக்கும்போது அவர் பஸ்களை ஓட்ட தகுதி உடையவரா? என்பதை பரிசோதித்த பிறகே பணியில் அமர்த்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.