தங்கம் வாங்கித் தருவதாக கூறி அரசு ஊழியரை தாக்கி ரூ.5 லட்சம் பறிப்பு 5 பேருக்கு வலைவீச்சு
வேலூர் அருகே குறைந்த விலைக்கு தங்க நாணயம் வாங்கித் தருவதாக கூறி அரசு ஊழியரை தாக்கி ரூ.5 லட்சம் பறித்து சென்ற நண்பர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அடுக்கம்பாறை,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த ஈகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 40). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஏழுமலையை ஏமாற்றி பணம் பறிக்க மணி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக வேலூரில் தனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் குறைந்த விலைக்கு தங்கநாணயம் கிடைக்கிறது. உங்களுக்கும் வாங்கித் தருகிறேன் என்று மணி கூறியிருக்கிறார். இதை உண்மை என்று நம்பிய ஏழுமலையும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஏழுமலையும், மணியும் நேற்று முன்தினம் இரவு வாடகை காரில் வேலூருக்கு புறப்பட்டுள் ளனர். தங்க நாணயம் வாங்குவதற்காக ஏழுமலை ரூ.5 லட்சம் எடுத்து வந்துள்ளார். வேலூரை அடுத்த அடுக்கம் பாறை வந்ததும் மணி காரை நிறுத்தும்படி கூறியிருக்கிறார்.
ரூ.5 லட்சம் பறிப்பு
உடனே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய மணி, சிறிது தூரம் ஏழுமலையை நடக்க வைத்து அழைத்துச் சென்றுள்ளார். ஏழுமலையும் ரூ.5 லட்சத்தை எடுத்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அங்கு ஒரு கார் நின்றுள்ளது. அதில் 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் மணி பேசியிருக்கிறார்.
அப்போது திடீரென்று காரில் இருந்தவர்கள் ஏழுமலையை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை பறித்துள்ளனர். பின்னர் அவர்களும், மணியும் அந்த காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஏழுமலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று ஏழுமலையிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் பணத்தை பறித்துச் சென்ற மணி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்தது உண்மைதானா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.