ஓடும் பஸ்சில் இறந்த தொழிலாளியின் பிணத்தை நடுரோட்டில் இறக்கியதால் பரபரப்பு
சூளகிரி அருகே ஓடும் பஸ்சில் இறந்த தொழிலாளியின் பிணத்தை நடுரோட்டில் இறக்கி விட்டு சென்ற தற்காலிக கண்டக்டரின் மனித நேயமற்ற செயலால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சூளகிரி,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கனகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வீரன்(வயது54). இவரது உறவினர் ராதாகிருஷ்ணன்(48). இவர்கள் இருவரும் பெங்களூருவில் கட்டிட தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். இவர்கள் 2 பேரும் பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூருக்கு செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தமிழக அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.
இவர்கள் 2 பேரிடம் இருந்தும் திருவண்ணாமலை வரை பயணம் செய்யும் வகையில் கட்டணம் வசூலித்து, தற்காலிக கண்டக்டர் டிக்கெட் வழங்கினார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டி என்ற கிராமத்துக்கு அருகே பஸ் சென்றபோது திடீரென வீரனுக்கு உடல் நலம் குன்றியது. இதில் அவர் ஓடும் பஸ்சிலேயே பரிதாபமாக இறந்தார்.
நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட பிணம்
இதை அறிந்த தற்காலிக கண்டக்டர் பஸ்சை நிறுத்தி, வீரனின் பிணத்தையும், ராதாகிருஷ்ணனையும் சூளகிரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் இறக்கி விட்டார். மேலும் வலுக்கட்டாயமாக இருவரது பயண சீட்டையும் தருமாறு கண்டக்டர் கேட்டார். அப்போது பயண சீட்டை தர மறுத்த ராதாகிருஷ்ணனிடம், ‘அந்த மனுசனே டிக்கெட் வாங்கிட்டான், உனக்கு எதுக்கய்யா டிக்கெட்?‘ என்று நக்கலாக பேசியவாறு இருவரின் பயண சீட்டையும் அவர் பறித்து கொண்டார்.
தற்காலிக கண்டக்டரின் இந்த மனித நேயமற்ற செயலும், அவர் நடந்து கொண்ட விதமும் பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மாற்று ஏற்பாடு கூட செய்ய மனமில்லாத அந்த கல்நெஞ்ச கண்டக்டரை எண்ணி பயணிகள் நொந்து கொண்டனர்.
இந்தநிலையில் நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட ராதாகிருஷ்ணன் 3 மணி நேரம் வீரனின் பிணத்துடன் அங்கேயே பரிதவித்துக் கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சூளகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் வீரனும், ராதாகிருஷ்ணனும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த கிராமத்திற்கு சென்றது தெரிய வந்தது. பஸ் கட்டணத்தை தவிர மேற்கொண்டு கையில் பணம் இல்லாமல் ராதாகிருஷ்ணன் அல்லாடிய பரிதாப நிலையை கண்டு சூளகிரி போலீசார், ஒரு தனியார் ஆம்புலன்சை ஏற்பாடு செய்து வீரனின் உடலையும், ராதாகிருஷ்ணனையும் அவர்களது கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சூளகிரி பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.