தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 175 பேர் கைது
திருவாரூரில் தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 175 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று 7-வது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தை, போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொ.மு.ச. துணை பொதுச்செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகையன், போக்குவரத்து கழக கிளை செயலாளர் மோகன், பாட்டாளி தொழிற்சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஐ.என்.டி.யூ.சி. அமைப்பின் துணை பொதுச்செயலாளர் சீனுவாசன், அம்பேத்கர் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் வேதநாயகம் உள்பட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் நேதாஜி சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு கடைவீதி, பஸ் நிலையம் வழியாக தொழிலாளர் துறை அலுவலகத்தை அடைந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.