சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உண்ணாவிரதம் தொழிலாளர்களும் பங்கேற்பு
சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சிவகாசி,
பட்டாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டியும் மத்திய சுற்றுச் சூழல் துறையில் பட்டாசுக்கு என தனியாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கூறியும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 26–ந் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிவகாசியில் திருத்தங்கல் சாலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகிற 22–ந் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் விதிகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.
போராட்டத்திற்கு டான்பாமா தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.