தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-01-10 23:00 GMT
கரூர்,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி வெண்ணைமலையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு அவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அரசு பஸ்கள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் மாற்று ஏற்பாடாக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் நியமிக்கப்பட்டு அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அரசு பஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தனியார் பஸ்களும் கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் செய்திகள்