11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். வருவாய்த்துறைக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி, ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று மாலை வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.