அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் போராட்டம்

அலுவலக உதவியாளர் களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 79 பெண்கள் உள்பட 477 பேர் கலந்து கொண்டனர்.

Update: 2018-01-10 22:30 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் 1 நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700-ஐ கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடுசெய்து வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று போனஸ் ரூ.3 ஆயிரம் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

477 பேர் பங்கேற்பு

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 84 பெண்கள் உள்பட 554 கிராம உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் நேற்று 79 பெண்கள் உள்பட 477 பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்