மராட்டியத்தில் தியேட்டர்களில் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்படும்
மராட்டியத்தில் சினிமா தியேட்டர்களில் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறியுள்ளார்.
மும்பை,
இந்தநிலையில் மத்திய அரசின் சிபாரிசை ஏற்று நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் அல்ல என உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை என உத்தரவிட்டாலும், மராட்டியத்தில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்படவேண்டும் என மாநில உள்துறை இணை மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–மத்திய அரசு கேட்டு கொண்டதற்கு ஏற்ப சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இது மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டுக்கு இடையே ஆனது. நாங்கள் எங்கள் முடிவில் தெளிவாக உள்ளோம். மராட்டியத்தில் தியேட்டர்களில் தேசிய கீதம் தொடர்ந்து இசைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் கடந்த 2003–ம் ஆண்டில் இருந்தே தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.