முதியவரின் வயிற்றுக்குள் சென்ற பல்செட்

முதியவரின் வயிற்றுக்குள் சென்ற பல்செட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

Update: 2018-01-09 21:10 GMT

மும்பை,

மும்பையை சேர்ந்த ராம்குபேர் (வயது77) என்ற முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன் வடபாவ் வாங்கி சாப்பிட்டார். அப்போது, அவரது வாயில் மாட்டப்பட்டிருந்த பல்செட் வடபாவுடன் சேர்ந்து வயிற்றுக்குள் சென்றுவிட்டது. இதனால் அவருக்கு வயிற்று வலி உண்டானது.

குடும்பத்தினர் அவரை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பல்செட்டை வெற்றிகரமாக அகற்றினார்கள்.


மேலும் செய்திகள்