விருத்தாசலத்தில் கருப்பு கொடியை கையில் ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் கருப்பு கொடியை கையில் ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-09 22:30 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் வடக்குக்கோட்டை வீதியில் தனியார் சர்க்கரை ஆலை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு ஜனநாயக கரும்பு விவசாயிகள் சங்கம், அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தனியார் சர்க்கரை ஆலையை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட அமைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மக்கள் விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் ராமர் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடியை கையில் ஏந்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் கந்தசாமி, சுரேஷ், குணசேகரன், கண்ணன், பாலு, செந்தாமரைகந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்