குடியாத்தம் அருகே தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் ‘சதாப்தி’ எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

வேலூர் மாவட்டம் குடியாத்தம்–காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாள பாதையில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2018-01-09 22:15 GMT

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் குடியாத்தம்–காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாள பாதையில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு இடத்தில் தண்டவாளத்தை இணைக்கும் ‘போல்ட்’ கழன்று கிடந்தது. அந்த வழியாக ரெயில் சென்றால் பெரும் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் சரி செய்தனர்.

அந்த பாதை வழியாக சென்னையில் இருந்து கோவைக்கு ‘சதாப்தி’ எக்ஸ்பிரஸ் ரெயில் செல்ல இருந்தது. சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டதால் ‘சதாப்தி’ எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பியது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்