களக்காடு அருகே வெள்ளத்தால் இடிந்த பாலம் தற்காலிகமாக சீரமைப்பு

களக்காடு அருகே மேல வடகரையில் வெள்ளத்தால் இடிந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

Update: 2018-01-09 21:00 GMT

களக்காடு,

களக்காடு அருகே மேல வடகரையில் வெள்ளத்தால் இடிந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

இடிந்து விழுந்த பாலம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேல வடகரை பச்சையாற்றில் பாலம் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம மக்களே நிதி திரட்டி பாலம் அமைத்தனர். அதன் வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஒகி புயலினால் களக்காடு பகுதியில் கன மழை கொட்டியது.

இதையடுத்து பச்சையாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் மேல வடகரை பாலம் இடிந்தது. இதனால் களக்காடு–மேல வடகரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராம மக்கள் 5 கி.மீ. தூரம் சுற்றி களக்காட்டுக்கு வந்து சென்றனர்.

தற்காலிகமாக சீரமைப்பு

இந்நிலையில் மக்கள் பணிக்காக நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வசந்தகுமார் வாங்கி கொடுத்துள்ள ஜே.சி.பி எந்திரம் மூலம் பொதுமக்கள் இணைந்து, தனியார் இடங்களில் இருந்து மண்ணை எடுத்து வந்து பாலத்தில் போட்டு, இடிந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைத்தனர். இதனையொட்டி மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. எனினும் அங்கு நிரந்தரமாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்