கோவில்பட்டியில் பொங்கல் பானை விற்பனை மும்முரம்
கோவில்பட்டியில் பொங்கல் பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, வருகிற 14–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று, அதிகாலையில் தமிழர்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்த;
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் பொங்கல் பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகைதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, வருகிற 14–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று, அதிகாலையில் தமிழர்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்தினருடன் இறைவனை வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், கோவில்பட்டியில் களிமண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானாமதுரையில் இருந்து பொங்கல் பானைகள், விறகு அடுப்புகள் கோவில்பட்டிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.
பானைகள் விற்பனைகோவில்பட்டி கடலைக்கார தெருவில் பொங்கல் பானைகள் ரூ.60 முதல் ரூ.150 வரையிலும், விறகு அடுப்புகள் ரூ.20 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அடுப்பு கட்டி ஒன்று ரூ.40–க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
மஞ்சள் செடிகள்இதேபோன்று கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பில் கிணற்றுப்பாசன நிலங்களில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டு உள்ளனர். மஞ்சள் செடிகள் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இவற்றை பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்பாக விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.