குழந்தைகளுக்கான சிறப்பு திரைப்பட விழா கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூரில் குழந்தைகளுக்கான சிறப்பு திரைப்பட விழா கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மீரா திரையரங்கத்தில் நேற்று இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கான சிறப்பு திரைப்பட விழா நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், திரையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து கண்டுகளித்தார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, திருவள்ளூர் ஆர்.டி.ஓ.திவ்யஸ்ரீ, இந்திய குழந்தைகள் திரைப்பட சங்க உதவி வினியோக அலுவலர் அகிலா, திருவள்ளூர் தாசல்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.